மேலும் அறிய
CSK pics: திருமண நிச்சயம்... வேட்டி அணிந்து வந்து நடனமாடிய சிஎஸ்கே வீரர்கள்.. லேட்டஸ்ட் பிக்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்
1/6

2022 ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
2/6

எனினும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
3/6

அடுத்து, வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவன் கான்வேவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
4/6

இந்த நல்ல செய்தியை கொண்டாடும் விதமாக சென்னை வீரர்கள் புத்தாடைகளுடன், ஆட்டம் பாட்டத்தோடு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
5/6

சென்னை அணி வீரர்கள் தோனி, கான்வே, ருதுராஜ், பிராவோ என அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
6/6

நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான டெவன் கான்வே, கிம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவருக்கு சென்னை அணி ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
Published at : 19 Apr 2022 12:08 PM (IST)
மேலும் படிக்க





















