மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
SAFF Championship : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெற்றி!
பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
தெற்காசிய கால்பந்து போட்டி 2023
1/6

14 ஆவது தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீராவா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
2/6

ஜூன் 21 தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று நடைப்பெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
3/6

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
4/6

இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி, 74ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 3 ஆவது கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
5/6

81 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்காக உதந்தா சிங் கோல் அடிக்க கோல் எதுவும் அடிக்காமலே பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது. இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
6/6

இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுடன் சலசலப்பில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் இசோர் ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published at : 22 Jun 2023 04:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















