மேலும் அறிய
Advertisement

Ban Vs Ind : அபாரமாக ஆடி அசத்தலான வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேச அணியுடன் மோதி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹர்மன்பிரீத் கவுர்
1/6

நேற்று ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியத்தில் இந்திய அணிக்கும் வங்கதேச அணிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
2/6

இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரியா புனியா களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 7 ரன்களுடன் பிரியா புனியா மருபா அக்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.
3/6

பின்னர் ஹர்மன்பிரீத் கவுருடன் கைகோர்த்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் எடுத்தனர்
4/6

50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 78 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்திருந்தார்.
5/6

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
6/6

இந்திய அணியின் சிறப்பான பந்தை எதிர்கொள்ள முடியாமல் வந்தவர் அனைவரும் ஒற்றை ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இதனால் 35.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம் . இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
Published at : 20 Jul 2023 04:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion