மேலும் அறிய
Ashes : இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய ஆஸ்திரேலியா!
ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் போட்டியின் இரண்டாவது டெஸ்ட் நேற்று லண்டனில் உள்ள லார்ட்சஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஷஸ் போட்டி
1/6

ஐந்து தொடர்களை கொண்ட அஷஸ் போட்டியின் இரண்டாவது டெஸ்ட் நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து மேக மூட்டமான வானிலையை கருத்தில் கொண்டு முதலில் ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கவாஜா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
3/6

9 ஓவர் முடிவில் அணியின் ரன் எண்ணிக்கை இருபதில் இருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
4/6

பின்னர் தொடர்ந்து ஆட ஆரம்பித்த ஆஸ்திரேலியா 73 ரன்கள் எடுத்து இருக்கையில் கவாஜா 17 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடிய வார்னர் அரைசதம் விளாசினார்.
5/6

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் ஆட்டமிழக்க துணை கேப்டன் ஸ்மித் களமிறங்கினார். இவர் 32 ரன்கள் அடித்த போது டெஸ்ட் போட்டியில் 9000 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
6/6

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Published at : 29 Jun 2023 12:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion