மேலும் அறிய

62 கிலோமீட்டர் மைலேஜ் ப்ரோ..பட்ஜெட் விலையில் கிடைக்குமா Honda SP 125?

Honda: ஹோண்டா நிறுவனத்தின் Honda SP 125 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. ஸ்கூட்டர், பைக் என பல இரு சக்கர வாகனங்களை வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்திய சாலையில் கம்பீரமாக உலா வரும் இவர்களின் Honda SP 125 என்ற இரு சக்கர வாகனத்தின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது. 

1. SP 125 Drum:

ஹோண்டாவின் இந்த SP 125 Drum பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 09 ஆயிரத்து 737 ஆகும், இதில் ட்ரம் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 116 கிலோ ஆகும்.  இது நீலம், கருப்பு, கருநீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது.

2. SP 125 25-year Anniversary Edition:

இந்த SP 125 25-year Anniversary Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்து 423. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 117 கிலோ எடை கொண்டது. கருநீலம், கருஞ்சாம்பல் நிறத்தில் இந்த பைக் உள்ளது. 

3.SP 125 Disc:

இந்த SP 125 Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 757 ஆகும். இந்த பைக்கில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் நீல நிறம், கருப்பு நிறம், கருநீலம், சாம்பல் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. 

மைலேஜ்:

Honda SP 125 பைக்கின் 123.94 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. இந்த Honda SP 125 பைக் 62 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. இதன் இருக்கை 790 மி.மீட்டர் ஆகும்.

அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.  முதல் கியரை கீழேவும், அடுத்த 4 கியரை மேலேவும் மாற்றி இயக்க வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 682 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

சிபிஎஸ் ப்ரேக் வசதி:

1 சிலிண்டர் ஏர் கூல்ட் 2 வால்வ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 10.9 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதில் சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்பக்கம் ஹைட்ராலிக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

கம்பீரமான தோற்றத்திற்கும், சாலைகளில் நெடுந்தூர பயணத்திற்கும் நல்ல மைலேஜுற்கும் இந்த பைக் மிகவும் வசதியானதாக உள்ளது. இதனால், இந்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தலைப்பு செய்திகள்

Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget