மேலும் அறிய
Ashes: கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியை வென்று சமன் செய்யுமா இங்கிலாந்து?
Ashes 2023 : இருவரும் அரைசதம் விளாச அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்தது.

டேவிட் வார்னர்
1/6

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
2/6

பின்னர் களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 295 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 12 ரன்கள் முன்னிலையில் இருந்த போது அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
3/6

இதனை தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் பின்னடைவில் இருந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
4/6

நேற்று நடந்த நான்காம் நாள் ஆட்டத்தை ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடங்கினர். 395 ரன்கள் எடுத்தபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட் ஆனார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
5/6

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் கவாஜா களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்ததால் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
6/6

இருவரும் அரைசதம் விளாச அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான இன்று 249 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா அணி வெற்றியை ருசிக்கலாம்.
Published at : 31 Jul 2023 12:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
அரசியல்
கோவை
கல்வி
Advertisement
Advertisement