மேலும் அறிய
Kachabeswarar Temple : வான வேடிக்கை முழக்கத்துடன் நடந்த கச்சபேஸ்வரர் கோவில் வெள்ளி தேரோட்டம்!
Kanchipuram temple : நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த வான வேடிக்கைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

கச்சபேஸ்வரர் கோவில்
1/8

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் முன்னிட்டு வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
2/8

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த வண்ண வண்ண வான வேடிக்கைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்.
3/8

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுந்தராம்பிகை ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவில் பழமை வாய்ந்ததும் ஆன்மீக பக்தர்கள் ஸ்ரீ கச்சபேஸ்வரரை வழிபட்டு நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிபாடு செய்வர்.
4/8

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மகா பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் இன்று இரவு சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, திருவாபரணங்கள் அணிவித்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
5/8

இதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீ கச்சபேஸ்வரர் வெள்ளித்தேர் உற்சவத்தின் போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக வண்ண வண்ண வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டு பொதுமக்கள் கண்கொள்ளா காட்சியாக கண்டு களித்தனர்.
6/8

நாகப் பாம்பு வடிவில் வானவெடி தயார் செய்யப்பட்டு அவை பாம்பை போல சீரி அங்கும் இங்குமாக வளைந்து காட்சிப்படுத்துவது போல பாம்பு வெடி அமைந்தது பொதுமக்களை ஆச்சரியத்திலும் காண கண் கொள்ளா காட்சியாகவும் கண்டுகளித்தனர்.
7/8

பிரம்மோற்சவங்களில் வெடிக்கப்படும் பிரம்மாண்ட வெடிகளால் நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் பொதுமக்கள் கண்டு களித்த மிகப்பிரமாண்ட வான வேடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றன.
8/8

தொடர்ந்து சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வெள்ளித்தேரின் வடம் பிடித்து இழுத்து ஸ்ரீ கச்சபேஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றனர்.
Published at : 26 Apr 2024 10:29 AM (IST)
Tags :
Kanchipuram Templeமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion