மேலும் அறிய
Chocolate Chip Cookies:கிளாசிக் சாக்கோ சிப் குக்கீஸ் - ரெசிபி இதோ!
Chocolate Chip Cookies:குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் செய்ய திட்டமிடுகிறீங்களா? இதோ சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்முறை எப்படி காணலாம்.

சாக்கோ சிப் குக்கீஸ்
1/6

மைதா மாவு, சோள மாவு, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை ஒரு சல்லடையில் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சலித்து தனியாக வைக்கவும்.
2/6

மற்றொரு பாத்திரத்தில், சர்க்கரை, பிரவுன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் சேர்க்கவும். பொருட்கள் மென்மையான கலவையாகும் வரை அடிக்கவும்.
3/6

பிறகு வெனிலா எசன்ஸ், உலர்ந்த மாவு கலவையில் பாதி மற்றும் பாதி சாக்லேட் சிப்ஸ் ஆகியவற்றை சர்க்கரை கலவையில் சேர்க்கவும். சிறிது காய்ச்சி ஆறிய பாலை சேர்த்து கலக்கவும்.
4/6

பிறகு மீதமுள்ள மாவு, இன்னும் சில சாக்லேட் சிப்ஸ் மற்றும் இன்னும் சிறிது பால் கலவையில் சேர்த்து மாவை தயார் செய்ய கலக்கவும்.குக்கீ மாவு தயாரானதும், அதை 30 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்
5/6

30 நிமிடங்களுக்குப் பிறகு, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, டிரேயில் உள்ள பட்டர் பேப்பரில் வைக்கவும்.மேலே சில சாக்லேட் சிப்ஸை வைத்து, மாவு உருண்டைகளை மெதுவாக அழுத்தவும்.
6/6

அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடில் 15 நிமிடங்களுக்கு முன்கூட்டியே சூடாக்கவும்.பிறகு அடுப்பில் குக்கீ மாவுடன் ஓவன் ட்ரேயை வைக்கவும். குக்கீகளை அதே வெப்பநிலையில் 20 நிமிடங்கள் வேக விடவும்.20 நிமிடங்களுக்குப் பிறகு, ட்ரேயை வெளியே எடுக்கவும். அவ்வளவுதான், சுவையான சாக்லேட் சிப் குக்கீ தயார்
Published at : 19 May 2024 04:17 PM (IST)
Tags :
Chocolate Chip Cookiesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion