மேலும் அறிய
Advertisement

Thakkali Thokku : சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி?
Thakkali Thokku : இந்த தக்காளி தொக்கை இட்லி, தோசை, உப்புமா, வெள்ளை சத்தத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும்.

தக்காளி தொக்கு
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 20 , பூண்டு - 6 பற்கள், பச்சை மிளகாய் - 2 , கறிவேப்பில்லை, தக்காளி - 4 , உப்பு, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள், தண்ணீர் - 1 1/2 கப், அரிசி மாவு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை.
2/6

செய்முறை : ஒரு குக்கரில், எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3/6

அடுத்தது இடித்த பூண்டு,தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
4/6

அடுத்தது கல் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லி தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
5/6

அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும். அதன்பின் அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும்.
6/6

2 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து அரிசி மாவை குழம்புடன் சேர்க்கவும் மீண்டும் 2 நிமிடம் கொதிக்கவைத்து கொத்தமல்லி இல்லை சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி தொக்கு தயார்.
Published at : 26 Aug 2024 11:46 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion