மேலும் அறிய

ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?

அமலாக்கத் துறை பறிமுதல் செய்தவற்றில், 18 சொத்துக்கள், நிலையான வைப்புத்தொகைகள், வங்கி இருப்புகள் மற்றும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலிடப்படாத முதலீடுகள் ஆகியவை அடங்கும்.

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL), ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) மற்றும் யெஸ் வங்கி தொடர்பான வங்கி மோசடி வழக்குகளில் தொடர்புடைய குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம்(ED) பறிமுதல் செய்துள்ளது.

எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.?

அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், 18 சொத்துக்கள், நிலையான வைப்புத் தொகைகள், வங்கி இருப்புத் தொகைகள் மற்றும் பட்டியலிடப்படாத முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் 7 சொத்துக்கள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட்டின் 2 சொத்துக்கள் மற்றும் ரிலையன்ஸ் வேல்யூ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 சொத்துக்களும் அடங்கும்.

ED கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட சொத்துக்கள் எவை.?

இவற்றுடன் கூடுதலாக, ரிலையன்ஸ் வேல்யூ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் வென்ச்சர் அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஃபை மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆதார் பிராப்பர்ட்டி கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் மற்றும் கேம்சா இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் முதலீடுகள் அமலாக்கத் துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ரூ.10,000 கோடியை தாண்டிய மொத்த பறிமுதல்கள்

அமலாக்கத் துறையால் தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு முன்னர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், RCFL மற்றும் RHFL தொடர்பான முந்தைய மோசடி வழக்குகளில் 8,997 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியிருந்தது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுடன் சேர்த்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு 10,117 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன.?

ED அளித்துள்ள தகவல்களின்படி, நிதி விசாரணையானது RCOM, RHFL, RCFL, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் உள்ளிட்ட பல ரிலையன்ஸ் ADA குழும நிறுவனங்களால் பொதுப் பணம் மோசடியாகத் திருப்பிவிடப்பட்டது அம்பலமாகியுள்ளது.

2017 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், யெஸ் வங்கி RHFL பத்திரங்களில் 2,965 கோடி ரூபாயும், RCFL பத்திரங்களில் 2,045 கோடி ரூபாயும் முதலீடுகளை செய்துள்ளன. பின்னர் இவை செயல்படாத சொத்துகளாக மாறி, 1,353.50 கோடி(RHFL) மற்றும் 1,984 கோடி(RCFL) நிலுவையில் உள்ளன.

அதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொது நிதி, குழுமத்திற்கு  வெவ்வேறு வழிகளில் சென்றடைந்தது தெரியவந்தது. செபியின்(SEBI) விதிமுறைகளுடனான முரண்பாடுகளால், அனில் அம்பானி குழும நிதி நிறுவனங்களை நேரடியாக ஆதரிப்பதற்கு, ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், நிதி, மறைமுகமாக யெஸ் வங்கி வழியாக செலுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டது.

மேலும், 2010 மற்றும் 2012-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட 40,185 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை, RCOM மற்றும் குழு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியதாகக் கூறும் CBI FIR-ன் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளையும் ED விசாரித்து வருகிறது. குறைந்தது 9 வங்கிகள் இந்த கணக்குகள் மோசடியானவை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget