மேலும் அறிய
Keerai Sambar : சத்தான சுவையான பசலைக்கீரை சாம்பார் செய்வது எப்படி ?
Keerai Sambar : சத்தான சுவையான பசலைக்கீரை சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கீரை சாம்பார்
1/6

தேவையான பொருட்கள் : பசலைக் கீரை - 1 கட்டு, கடலைப் பருப்பு -1 டீஸ்பூன் , வெங்காயம் - 200 கிராம், பச்சை மிளகாய் - 2 , சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு, தக்காளி - 1 நறுக்கியது, புளி தண்ணீர் - 1/2 கப், தண்ணீர், எண்ணெய் - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், துவரம் பருப்பு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், கடுகு விதைகள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை
2/6

செய்முறை : முதலில் துவரம் பருப்பை வேகவைத்து கடைந்து எடுத்துக்கொள்ளவும்.
3/6

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு , சீரகம் மற்றும் கடுகு சேர்க்கவும் வதக்கவும். கடுகு பொரிந்த உடன் பெருங்காய தூள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4/6

வெங்காயம் பச்சை மணம் நீங்கியதும் கறிவேப்பிலை, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறிவிடவும். அடுத்து புளி ஊறவைத்த தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.
5/6

அடுத்தது பசலைக் கீரை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அதன்பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து கிளறிவிடவும்.
6/6

சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுவைக்கு உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடிய நிலையில் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான பசலைக் கீரை சாம்பார் தயார்
Published at : 02 Jul 2024 11:27 AM (IST)
மேலும் படிக்க





















