எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
ஒரு சில அரசியல் லாபத்திற்காக பிரிவுகள், பிளவுகளை உண்டு செய்து சமூகத்தை துண்டாட சதி செய்கிறார்கள். இது ஆன்மிகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
மதுரை மாவட்டத்தில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3065 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், நம்முடைய சிந்தனை தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் கொண்டுள்ளதாக உள்ளது. சில கட்சிகளுக்கு கலவர சிந்தனை தான் உள்ளது.
தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். காலம் காலம் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது போல் கடந்த 3ஆம் தேதி பால தீபம் ஏற்றப்பட்டது. உள்ளூர் மக்கள், பக்தர்களுக்கு தெரியும். அவர்களும் நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு சென்றார்கள். ஆனால் திருப்பரங்குன்றத்தில் எதற்காக பிரச்சனை நடக்குது. எதற்காக பிரச்சனையை கிளப்புராங்க நோக்கம் என்ன என மக்களுக்கு தெரியும்.
இது ஆன்மிகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல்
ஆன்மிகம் என்பது மன அமைதி, நிம்மதி தந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும், நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், இது தான் உன்மையான ஆன்மிகம், ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக பிரிவுகள், பிளவுகளை உண்டு செய்து சமூகத்தை துண்டாட சதி செய்கிறார்கள். இது ஆன்மிகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல், தீபம் எங்க ஏற்றப்படனுமோ வழக்கம் போல சரியா ஏற்றப்பட்டுவிட்டது.
தமிழக வரலாற்றில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 1490 நாட்களில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளது. இப்படி பட்ட அரசு ஆன்மிகத்திற்கு எதிரி என கூறினா என்ன நோக்கம் என மக்களுக்கு புரியும். மதுரை மக்கள் கிட்ட வளர்ச்சி என்று சொன்னால் வாங்க வாங்க என வரவேற்ப்பார்கள், வன்முறை தூண்ட கூப்பிட்டால் என்ன சொல்லுவார்கள். பிடரியிலேயே அடித்து விரட்டுவார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்த சதி
அமைதி பக்கம் நின்ற மதுரை மக்களுக்கு நன்றி, பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய எதிரிகள் எத்தனை இடையூறுகள், டெல்லியில் இருந்து நெருக்கடி கொடுத்தாலும் நிதி நெருக்கடி கொடுத்தாலும், ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போட்டாலும், இந்தியாவிலேயே தமிழகம் வளரச்சி அடைந்துள்ள மாநிலமாக உள்ளது.
ஆனால் தமிழகம் வளர்ச்சி பயணத்தை தாங்க முடியாமல் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த பந்து வீசினாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை அடிக்கிறது சிக்ஸ்சர்தான் . பல அடிமைகள் சிக்கலாம் ,பழைய அடிமைகள், புது அடிமைகள் என பி டீம், சி டீம் இருக்கலாம். ஆனால் டோர்னமெண்ட் என்றால் சாம்பியன் நாங்கள் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.





















