மேலும் அறிய
Rice Bonda: அரிசி மாவு போண்டா எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
Rice Bonda: மாலை நேர ஸ்நாக்ஸ் அரிசி போண்டா செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் காணலாம்.

அரிசி போண்டா
1/6

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 250 மி.லி, உளுத்தம் பருப்பு - 250 மி.லி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய்
2/6

செய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது அரிசி மற்றும் உளுந்தை நன்கு அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது அரைத்த மாவில் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5/6

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை சின்ன சின்ன உருண்டைகளாக சேர்க்கவும்.
6/6

அடுத்தது எண்ணெயில் உள்ள போண்டாவை மீதமான தீயில் ஒரு நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அரசி போண்டா தயார்.அரிசி போண்டாவுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
Published at : 08 Aug 2024 11:55 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
திருவண்ணாமலை
க்ரைம்
Advertisement
Advertisement