Food City Mumbai: உலகின் சிறந்த உணவுகளின் நகரம்; 2024-ல் டாப் - 5 நாடுகள் எவை?
Food City Mumbai: சிறந்த உணவுகளின் நகரம் என்ற பட்டியலில் மும்பை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மும்பை நகரம் அழகிலும் உணவு வகைகளிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சிறப்புகளைப் பெற்றுள்ளது. கனவுகளின் நகரமான மும்பை Taste Atlas வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டிற்கான '100 best food cities in the world' என்ற பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.
2025-ம் ஆண்டில் சுற்றுலா செல்ல திட்டம் இருந்தால், மும்பைக்கு சென்று அங்குள்ள உணவுகளையும் ஸ்ட்ரீட் உணவுகளையும் ருசித்து சாப்பிடலாம். பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2024 -ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து விமர்சனம் செய்யும் பணியை செய்து வருகிறது. உணவுப் ப்ரியர்களின் வாக்குகளின் அடிப்படையிலும் இவர்களின் சிறந்தவைகள் பட்டியல் தயாரிக்கப்படும்.
உலகிலேயே ருசியான உணவுகள் சாப்பிட சிறந்த 100 நகரங்கள் ('100 best food cities in the world')
Taste Atlas நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் சிறந்த உணவுகள் கிடைக்கும் நகரங்களில் ஐந்தாவது இடத்தில் மும்பை இடம்பெற்றுள்ளது. Naples, Milan, Bolanga, Florance ஆகியவை முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளது.
View this post on Instagram
மும்பைக்கு செல்பவர்கள் நிச்சயம் பாவ் பாஜி, வடா பாவ், மோதக்,Bhelpuri, பாம்பே பிரியாணி, பாம்பே சாண்ட்விச், Ragda pattice ஆகிய உணவுகளை ருசித்து மகிழ வேண்டும் என அந்நிறுவனம் வகைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
பாவ் பாஜி
மும்பையின் பிரபலமான ஸ்ட்ரீட் வகை உணவுகளில் ஒன்று பாவ் பாஜி. மஹாராஷ்டிர மாநிலத்தின் ஸ்ட்ரீட் ஃபுட் எனலாம். பாவ் பன் உடன், காய்கறிகள் சேர்த்து Curry உடன் இதை சாப்பிட்டால் ருசி சூபவ்ராக இருக்கும். 1850 களில் கண்டுப்பிடிக்கப்பட்டது. மும்பையில் உள்ள ஆடை தயாரிக்கும் ஆலைகளில் வேலை செய்வோர்களுக்கு முக்கியமான உணவாக இது இருந்துள்ளது. மிசல் பாவ் என்ற உணவும் சுவையாக இருக்கும். வடா பாவ், பாம்பே சாண்ட்விட் இரண்டிலும் சேர்க்கப்படும் சட்னி தனித்துவமான சுவையை தரும்