மேலும் அறிய

School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஏராளமான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையின் தன்மை குறித்து ஆய்வு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். கரூர், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை:

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலியில் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருவண்ணாமலை  மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதுடன் பல மாவட்டங்களில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று தீவிர மழை இருக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. விடிய, விடிய சென்னையில் பெய்த மழையால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
Rasipalan December 12: உடன்பிறப்புகளால் மிதுனத்திற்கு மகிழ்ச்சி; கடகத்திற்கு செலவு- உங்க ராசி பலன்?

ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!

Food City Mumbai: உலகின் சிறந்த உணவுகளின் நகரம்; 2024-ல் டாப் - 5 நாடுகள் எவை?
Food City Mumbai: உலகின் சிறந்த உணவுகளின் நகரம்; 2024-ல் டாப் - 5 நாடுகள் எவை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
Rasipalan December 12: உடன்பிறப்புகளால் மிதுனத்திற்கு மகிழ்ச்சி; கடகத்திற்கு செலவு- உங்க ராசி பலன்?
Rasipalan December 12: உடன்பிறப்புகளால் மிதுனத்திற்கு மகிழ்ச்சி; கடகத்திற்கு செலவு- உங்க ராசி பலன்?
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Food City Mumbai: உலகின் சிறந்த உணவுகளின் நகரம்; 2024-ல் டாப் - 5 நாடுகள் எவை?
Food City Mumbai: உலகின் சிறந்த உணவுகளின் நகரம்; 2024-ல் டாப் - 5 நாடுகள் எவை?
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 

"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!

பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!

Embed widget