மேலும் அறிய
Masala Noodles: மாலை நேர ஸ்நாக்ஸ்..சுவையான மசாலா நூடுல்ஸ் ட்ரை பண்ணுங்க- இதோ ரெசிபி!
Masala Noodles: குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுக்கலாம் என்று யோசனை இருந்தால் இதோ மசாலா நூடுல்ஸ் சாப்பிடுங்க..இதை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம்.

மசாலா நூடுல்ஸ்
1/6

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு உப்பு சேர்த்து ரமேன் நூடுல்ஸ்சை சேர்த்து வேகவிடவும்.சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் இன்றி வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
2/6

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3/6

பின்பு நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்துவிடவும். பிறகு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
4/6

பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து கலந்துவிடவும்.
5/6

பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து வேகவைத்த நூடுல்ஸ்சை சேர்த்து கலந்துவிடவும்.
6/6

கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான மசாலா நூடுல்ஸ் தயார்!
Published at : 17 May 2024 03:29 PM (IST)
Tags :
Masala Noodlesமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement