மேலும் அறிய
Oats Upma : இட்லி, தோசை போர் அடிக்குதா? அப்போ காலையில் சுவையான ஓட்ஸ் உப்மா செய்து சாப்பிடுங்க!
Oats Upma Recipe : காலை வேளையில் எப்போதும் சத்தான மிதமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஓட்ஸ் உப்மா
1/6

தேவையான பொருட்கள் : ஓட்ஸ் - 2 கப், எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, பீன்ஸ் - 1 கப் நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பச்சை பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , உப்பு - 1 1/2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், எலுமிச்சை பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை
2/6

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
3/6

அதன் பிறகு பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4/6

வெங்காயம் வதங்கியதும், பீன்ஸ், கேரட், தக்காளி, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வைத்தவும்.அதன் பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு ஓட்ஸை சேர்க்கவும்.
5/6

அடுத்தது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவைக்கவும்.
6/6

கடைசியாக எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறிட்டு இறக்கினால் சுவையான ஓட்ஸ் உப்மா தயார்
Published at : 08 Jun 2024 11:19 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
உலகம்
கிரிக்கெட்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion