மேலும் அறிய
Brinjal Rasam : அசத்தலான ஆந்திர கத்திரிக்காய் ரசம் செய்வது எப்படி?
Brinjal Rasam : ரசம் சாதம் ரொம்ப பிடிக்குமா ? அப்போ ஒரு முறை இந்த ஆந்திர கத்திரிக்காய் ரசம் செய்து பாருங்க சுவையாக இருக்கும்.

கத்திரிக்காய் ரசம்
1/6

தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, வெல்லம் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை , புளி சாறு, தண்ணீர், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
2/6

செய்முறை: முதலில் கத்தரிக்காயை அடுப்பில் சுட்டு தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, வெல்லம் சேர்த்து கையால் பிசைந்து கொள்ளவும்.
4/6

அடுத்தது புளி கலந்த தண்ணீரை சேர்த்து கையால் கலந்து விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
5/6

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
6/6

தாளிப்பை கத்தரிக்காய் கலவையில் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்
Published at : 11 Sep 2024 11:22 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion