Diwali 2024:மகிழ்ச்சியாக கொண்டாடுங்க..பாதுகாப்பான தீபாவளி சில டிப்ஸ்!
Diwali 2024
By : ஜான்சி ராணி | Updated at : 31 Oct 2024 07:26 AM (IST)
தீபாவளி
1/5
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.
2/5
பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது
3/5
என்னது பட்டாசு வெடித்தால் செடி வளருமா என்று கேட்டால், ஆம். குறைந்த ரசாயனம் உள்ள பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று வெகு காலமாக சொல்லப்படுகிறது. இதுவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது. ஒலி மாசுவை குறைப்பதற்கு குறைந்த அளவிலாக பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம். அத்துடன், சந்தையில் பட்டாசு வெடித்தால் அதற்குள் சில காய்கறி, செடி விதைகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரகம் கிடைக்கிறது.
4/5
குறைந்த அளவில் சர்க்கரை உள்ள இனிப்புகளை நண்பர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் பரிசாக அளிக்கலாம். செடிகள், காய்கறி, கீரை விதைகள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்கலாம். பிளாஸ்டிக் இல்லாத பரிசாக இருந்தால் நல்லது.
5/5
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்கும்போது கவனமுடன் பட்டாசு வெடிக்கவும். பட்டாசு வெடிக்கும்போது கதர் ஆடைகள் அணிவது நல்லது. பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாலியில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது.