மேலும் அறிய
Sweetheart OTT: ஒரே மாதத்தில் ஓடிடிக்கு பார்சலான ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட் '! ரிலீஸ் தேதி இதோ!
ரியோ ராஜ் நடிப்பில், கடந்த மாதம் ரிலீஸ் ஆன 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஸ்வீட்ஹார்ட் ஓடிடி ரிலீஸ் தேதி
1/4

இசையமைப்பாளர் என்பதை தொடர்ந்து, வித்தியாசமான காதல் கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வரும், யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் 'ஸ்வீட்ஹார்ட்'.
2/4

உறவுகள் பற்றியும், உளவியல் சிக்கலில் சிக்கும் ஒரு காதல் ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, உணர்வுபூர்வமாகவும், ரசிக்கும் படியாகவும் கூறியிருந்த திரைப்படம் தான் 'ஸ்வீட்ஹார்ட்'. ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில், இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும், மற்றொரு தரப்பு கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர்.
3/4

மேலும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, படக்குழுவினர் ஈரோடு - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் - டி என் சி திரையரங்கத்திற்கும், கோவை - பிராட்வே திரையரங்கத்திற்கும், திருப்பூர் - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களை சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
4/4

தற்போது இந்த படம் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம்... ஏப்ரல் 11-ஆம் தேதி, ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தலத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்கில் பார்க்க மிஸ் பண்ணி ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
Published at : 08 Apr 2025 09:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















