மேலும் அறிய

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு" பகீர் கிளப்பிய ஜோதிமணி! சீனுக்கு வந்த ராகுல்

தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடும் இல்லாமல் உட்கட்சி பிரச்னை பூதாகரமாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு புகாரை அடுக்கிய நிலையில், உடனடியாக ஆக்ஷனில் இறங்கியுள்ளது காங்கிரஸ் தலைமை.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் உட்கட்சி பிரச்னை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. உட்கட்சி பிரச்னையில் கூட்டணியினர் தலையிடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், எம்.பி மாணிக்கம் தாகூரும் சொல்லியிருந்தனர். இந்தநிலையில் சொந்த கட்சி தொடர்பாகவே புகார்களை அடுக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் எம்.பி ஜோதிமணி.

அதில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.  தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.  கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை  நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை  அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ,ஒரு பேராபத்தை,மதவாத, பிரிவினைவாத,வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.  எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து,பெருந்தலைவர் காமராசர்,பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை,மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச்  சூழலில், எதிர்நோக்கியுள்ள  தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.  ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை  சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை,ஒவ்வொரு ஊரிலும்  பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத,பிரிவினைவாத சூழ்ச்சிக்கு  அடிபணியாமல் சமூக நீதி,சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு  மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.  தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான  அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம்,மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின்,அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ம்பி. ஜோதிமணி எழுப்பியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜோதிமணியிடம் கருத்து கேட்டுள்ளோம். பிரச்சனைகள் குறித்து அவர் எங்களிடம் தெரிவித்திருக்கலாம் என கூறியுள்ளார்.

அரசியல் வீடியோக்கள்

Minister Keerthana:
Minister Keerthana: "நானும் அரசுப்பள்ளி மாணவிதான்! வீடியோவை நான் எடுக்கல” அமைச்சர் கீர்த்தனா பதிலடி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஏக்கருக்கு வெறும் ரூ.733 தான்.. ஆனால் கிடைக்கும் பலன் பல மடங்கு! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
ஏக்கருக்கு வெறும் ரூ.733 தான்.. ஆனால் கிடைக்கும் பலன் பல மடங்கு! ஆட்சியர் தகவல்!
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget