பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பேருந்துகள் தற்காலிக முனையங்களுக்குச் செல்லும் வழியில் பாரிஸ் கார்னர் மற்றும் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிராட்வே பேருந்து முனையத்தில் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் வரும் 7 ஆம் தேதி முதல் இராயபுரம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இரண்டு தற்காலிக முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் வழித்தடங்கள்
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் : 6, 13, 60E, 102, 109, 1020, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 216, 21L, 21E ET.
அண்ணா சாலை வழியாக இயக்கபடும் பேருந்துகள் : 11, 21, 26, 52, 54, 60, 105, 116, 11M. 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 188, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 266, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R..
ஈ.வே.ரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 50, 101CT. 101X, 53E, 53P
பயணிகள் ஏறும்/இறங்கும் இடம்
- அண்ணாசாலை மற்றும் ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தட பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது North Fort சாலையில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
- அதே போல் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி NSC Bose சாலை மற்றும் Esplanade சாலையில் வந்து North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
- இராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வேரா சாலை மற்றும் அண்ணாசலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல் North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
- அதே போல் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல் North Fort சாலை வலதுபுறம் திரும்பி Esplanade சாலையில் இராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
2. தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம்
பீச் ஸ்டேஷன் வழியாக செல்லும் வழித்தடங்கள் : 1, 4, 44, 330, 331, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 560, 56D ET, 56J, 56K, 56P, 570, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET.
மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F.
ஈ.வே.ரா சாலை வழியாக செல்லும் வழித்தடங்கள் :15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 710, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150
35, 42, 242, 1428, 142P, 35C, 428, 420, 420, 42M, 640, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET
பயணிகள் ஏறும்/இறங்கும் இடம்:
- பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல். North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
- மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி சாலையில் Fort station-ல் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் தின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்
- ஈ.வேரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது இராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி TNPSC சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி. TNPSC சாலை மற்றும் Evening Bazaaள வழியாக மீண்டும் ஈவேரா. சாலை வந்தடைந்து முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்
- தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச்ஸ்டோன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று வலது புறம் திரும்பி North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
- அதே போல் ஈவேரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருத்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று பிராஜா அண்ணாமலை மன்றம் முன்பு பயணிகளை ஏற்றி Esplande சாலை வழியாக NSC Bose சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி Evening Bazaar வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
பயணிகள் கவனத்திற்கு:
இந்த மாற்றம் 07.01.2026 முதல் அமலுக்கு வருகிறது. பேருந்துகள் தற்காலிக முனையங்களுக்குச் செல்லும் வழியில் பாரிஸ் கார்னர் மற்றும் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






















