JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : பிரம்மாண்டமான ஆக்ஷன் , விஜயின் அரசியல் , செண்டிமெண்ட் என பல்வேறு விஷயங்களை ஒட்டுமொத்தமாக கொட்டிவைத்தது போல் உள்ளது ஜனநாயகன் டிரெய்லர்

விஜயின் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாலையாவின் பகவந்த் கேசரி படத்தின் கதையைத் தழுவி இப்படம் உருவாகியிருந்தாலும் படத்தில் விஜயின் அரசியல் மற்றும் ரசிகர்களை திருபதிபடுத்தும் விதமாக புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. காட்சியமைப்புகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் படம் விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்ற ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான் . ஜனநாயகன் பட டிரெய்லர் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்
தனது மகளாக வளர்க்கும் மமிதா பைஜூவை எப்படியாவது ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நாயகன் தளபதி வெற்றிக் கொண்டார். ஆனால் மமிதா பைஜூவுக்கு ராணுவத்தில் சேர விருப்பமில்லை. அதே நேரம் வில்லனான பாபி தியோல் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஆபத்தான சதிதிட்டத்தை தீட்டுகிறார். அவருக்கு உதவியாக உள்ளூர் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். நாயகனாக விஜய் தனது மகளை ராணுவத்தில் ஏன் சேர்க்க நினைக்கிறார். மமிதா பைஜூ ஏன் ராணுவத்தை கண்டு பயப்படுகிறார் என்பதே படத்தின் கதை.
விஜய் அரசியல்
ஜனநாயகன் படத்திற்கு பின் முழு நேர அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய் படம் முழுக்க தனது அரசியல் கட்சிக்கான ப்ரோமோஷனை செய்திருக்கிறார் என்பது இந்த டிரெய்லரில் தெரிகிறது. 'திரும்பி போற ஐடியாவே இல்ல ' 'ஐ ஆம் கமிங்' போன்ற வசனங்கள் ஒருக்கம் என்றால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை சாட்டையால் அடிக்கும் காட்சிகள் இன்னொரு பக்கம்.
பிரம்மாண்ட காட்சியமைப்புகள்
காட்சி அமைப்புகள் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. சண்டை காட்சிகள் மட்டுமில்லாமல் மக்கள் ஆதரவை பெறும் விதமாக பல காட்சிகளை படத்தில் எதிர்பார்க்கலாம் . ஒரே படத்தில் மூன்று கதைகள் இருப்பது போல் ஒரு உணர்வு டிரெய்லரை பார்க்கையில் ஏற்படுகிறது. ஒருபக்கம் விஜயின் அரசியல் , இன்னொரு பக்கம் மகள் செண்டிமெண்ட் , இன்னொரு பக்கம் ரோபோட்கள் , ராணுவம் என 3 மணி நேர படத்தில் எல்லாவற்றையும் சரியாக கையாண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்
அனிருத் இசை
அனிருத் இசை நிச்சயம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாடல்களாகட்டு , பின்னணி இசையாகட்டும் ரசிகளை உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும் அதே நேரம் மாஸான இசையையும் எதிர்பார்க்கலாம்





















