மேலும் அறிய
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீடு கட்டி முடிப்பதற்குள், அவர் மறைந்த நிலையில் இப்போது அந்த வீடி கிரகப்பிரவேசத்திற்கு தயாராகியுள்ளது.
விஜயகாந்தின் கனவு இல்லத்தின் கிரஹப்பிரவேசம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
1/4

கடந்த ஆண்டு உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் சில தினங்களுக்கு முன் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் இதனை குருபூஜை என்கிற பெயரில் அனுசரித்தனர்.
2/4

இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு முன்னர் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் வந்தால் தங்குவதற்கு வசதியாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வந்தார். ஆனால், அந்த வீடு கட்டி முடிப்பதற்குள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் மகன்கள் மற்றும் மனைவியுடன் வசித்து வாழ்ந்து வந்த விஜயகாந்த் போரூர் பகுதியில் உள்ள காட்டுப்பாக்கத்தில் தான் இந்த பிரமாண்ட வீட்டை கட்டி இருந்தார்.
Published at : 03 Jan 2025 09:06 AM (IST)
மேலும் படிக்க





















