மேலும் அறிய

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்.

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் Netflix தளத்தில் வெளியாகிறது.

இப்படத்தில் இளனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியுடன், கணவனும் மனைவியின் வீட்டிலேயே சென்று வசிக்கும் சூழலை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் குடும்ப உறவுகள், காதல், எதிர்பார்ப்புகள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை புதிய கோணத்தில் இப்படம் சொல்ல முயற்சித்துள்ளது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநராக இருந்த ஒருவர் நடிகராக மாறுவதற்கு தைரியம் தேவை என்றும், அந்த தைரியம் இளனிடம் இருப்பதாகவும் பாராட்டினார். டிரெய்லரில் தன்னை சிரிக்க வைத்த பல காட்சிகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகை ராதிகா, இன்றைய இளைஞர்களின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த மாறிவரும் பார்வைகளை இப்படம் பேசுவதாக கூறினார். இது வழக்கமான குடும்பப் படம் அல்ல என்றும், சமூக மாற்றங்களை நேர்மையாக கையாளும் திரைப்படம் என்றும் தெரிவித்தார்.

நடிகர் செந்தில், இளனின் கதாபாத்திரம் தனக்கு இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜை நினைவுபடுத்துவதாக கூறினார். இளங்கோ குமரவேல், படத்தில் இடம்பெறும் மாமனார் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பப்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.

யோகிபாபு, ‘ஸ்டார்’ படத்திலிருந்தே இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பேச்சு இருந்ததாகவும், தற்போது அந்த வாய்ப்பு நிறைவேறியிருப்பதாகவும் கூறினார். மேலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து மற்றொரு படத்திலும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

சான்வி மேக்னா, இயக்குநராகவும் நடிகராகவும் இளன் ஒரே நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டினார். இயக்குநர் இளன், இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், இப்படத்தின் ‘அட்ராசிட்டி’ பாடல் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இளன் தெரிவித்தார். படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், முழு ஆல்பத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை அதிகமாக விளக்காமல், ரசிகர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களுடன் கதையை தொடர்புபடுத்தி ரசிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் இளன் கூறினார். இந்த புதிய முயற்சி இளனுக்கு நடிகராகவும் இயக்குநராகவும் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதை வெளியீட்டுக்குப் பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தை முழுமையாக பார்த்துவிட்டதாகவும், இது சிறந்த என்டர்டெயினராகவும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். காதல், திருமணம், குடும்பம் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டுள்ள இப்படம் ஆகஸ்ட் 21 முதல் Netflix தளத்தில் வெளியாகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget