மேலும் அறிய
Leo Audio Launch : ரத்து செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா.. பொங்கி எழும் விஜய் ரசிகர்கள்!
Leo Audio Launch : ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் மதுரை ஹாப்பி ஸ்ட்ரீட் போன்று பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழு கருதியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ வெளியீட்டு விழா
1/7

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வரும் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டது.
2/7

இதன் பின், அரசியல் விமர்சகரான சவுக்கு ஷங்கரின் சர்ச்சையான பதிவை ரீ-ட்வீட் செய்து, “இந்த தகவல் உண்மையல்ல” என பதிவிட்டது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம்.
3/7

இசை வெளியீட்டு விழாவின் முன்னேற்பாடு பணிகளின் வீடியோ, நுழைவு டிக்கெட்டுகளின் புகைப்படம் என அனைத்தும் ட்ரெண்டாகி வந்தது.
4/7

இதையடுத்து, நேற்று இரவு, “நிகழ்ச்சியில் பங்கேற்க அளவுக்கதிகமாக பாஸ் கேட்டு கோரிக்கைகள் வந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்டுகள் வெளியிட்டு உங்களை உற்சாகப்படுத்துவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/7

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 6000 பேர் வரை பங்கேற்கலாம். ஆனால், லியோ இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளில் சுமார் 5000 ஆயிரம் டிக்கெட்டுகள் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு மட்டும் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. மீதமுள்ள டிக்கெட்டுகள் மட்டுமே படக்குழுவினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் குவிய தொடங்கியுள்ளது. அப்படி கூடுதல் டிக்கெட்டுகளை வழங்கினால் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் மதுரை ஹாப்பி ஸ்ட்ரீட் போன்று பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழு கருதியுள்ளது. இதன் காரணமாகவும், படத்தின் வணிகத்தை கருத்தில் கொண்டும் தான், இசைவெளியிட்டு விழாவை லியோ படக்குழு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/7

இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜய்யை நேரில் பார்க்கும் வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளனர். சிலர், #WeStandWithLEO, #DMKFearsThalapathyVIJAY போன்ற ஹாஷ்டாக்குகளை ட்ரெண்ட் செய்து, அரசியல் குறித்து விஜய் பேசிய பட வசனங்களையும், மேடை பேச்சுக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
7/7

தலைவா படம் முதல் பல பிரச்சினைகளை விஜய் சந்தித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில், பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்சிக்கு பின்னர், லியோ படத்தின் ஆடியோ லான்ச் விழாவும் ரத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 27 Sep 2023 12:42 PM (IST)
மேலும் படிக்க





















