மேலும் அறிய
Vijay Antony ARR : ‘இது முற்றிலும் பொய்யே..’ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!
Vijay Antony ARR : தனியார் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியால் தான் வேதனை அடைத்துள்ளதாகவும், விரைவில் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் விஜய் ஆண்டனி தற்போது தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி - ஏ.ஆர். ரஹ்மான்
1/6

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
2/6

அடுத்த நாள்(10.09.2023), கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் எக்கசக்கமான குளறுபடிகள் நடந்தது.
3/6

தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், விஜய் ஆண்டனி பாஜகவுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடத்த சதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
4/6

கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்தத் தகவல் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
5/6

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியால் தான் வேதனை அடைத்துள்ளதாகவும், விரைவில் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் விஜய் ஆண்டனி தற்போது தெரிவித்துள்ளார்.
6/6

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் சிறு மன வேதனையுடன் இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூடியூப் சேனல் ஒன்றில் என்னைப் பற்றியும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது முற்றிலும் பொய். அந்த யூட்யூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Published at : 16 Sep 2023 10:57 AM (IST)
மேலும் படிக்க





















