மேலும் அறிய

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக டிட்வா புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக டிட்வா புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்த புயல் சென்னை கடற்கரை அருகே வந்து நகராமல் நிலை கொண்டு இருந்ததால் சென்னையில் இடைவிடாது மழை பெய்தது. நேற்று (டிசம்பர் 5) முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து வெயில் தலை காட்ட தொடங்கியிருக்கிறது. அதேசமயம் பல்வேறு மாவட்டங்களிலும் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 

இன்று மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரையிலான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் டிசம்பர் 7ம் தேதி முதல் 12ம்  தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம் 

சென்னையைப் பொறுத்தவரை இன்று (டிசம்பர் 6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் புறநகர் பகுதிகளிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

தலைப்பு செய்திகள்

காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget