மேலும் அறிய
Varisu : இந்த பொங்கல்..வாரிசு பொங்கல்...வைரலாகும் வாரிசு ட்ரெய்லர்!
Varisu Release : நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாரிசு
1/8

இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது என சொல்லலாம்.
2/8

8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக களமிறங்குவதால் எந்த படம் ஹிட்டாக போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
3/8

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.
4/8

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
5/8

தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
6/8

படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.
7/8

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பக்கா பேமிலி என்டெர்டெயின்மென்ட் ஆக உருவாகியுள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
8/8

வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் அஜித் நடித்த துணிவு படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.
Published at : 05 Jan 2023 01:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















