மேலும் அறிய

Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?

ஐபோன் 17 மாடல் தொடர்பாக, இந்திய மொபைல் போன் சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு, ஆப்பிள் விநியோகஸ்தர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது எதற்காக தெரியுமா.?

இந்திய மொபைல் போன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். புதிதாக விற்கப்படும் ஐபோன்கள், அதிலும் குறிப்பாக, ஐபோன் 17 மாடல்கள், வாங்கிய 90 நாட்களுக்குள் வெளிநாட்டு சிம் கார்டுகளுடன் செயல்படுத்தப்பட்டால், மிகப் பெரிய அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர். அது எதற்காக என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆப்பிள் விநியோகஸ்தர்கள் விடுத்த எச்சரிக்கை என்ன.?

இது தொடர்பாக ஆப்பிள் விநியோகஸ்தர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், "உங்கள் விற்பனை நிலையத்திலிருந்து விற்கப்படும் எந்தவொரு சாதனமும், 90 நாட்களுக்குள் வெளிநாட்டு சிம் கார்டுடன்  செயல்படுத்தப்பட்டாலோ அல்லது பயன்படுத்தப்பட்டதாகவோ கண்டறியப்பட்டால், உங்கள் விற்பனை நிலையத்திற்கு அதிக அபராதம் விதிக்கப்படும். மேலும், நிறுவன கொள்கையின்படி, கடை குறியீடு(Store Code) தடுக்கப்படலாம்(Block)" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எச்சரிக்கைக்கு காரணம் என்ன.?

ஐபோன் 17 மாடல்கள், இந்திய சந்தைகளைவிட, ரஷ்யா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அதிக லாபம் ஈட்டும் மாடலாக உள்ளது. இதனால், இந்தியாவிற்கு வரும் ஐபோன் 17 மாடல் போன்கள், அந்த இடங்களுக்கு மொத்தமாக திருப்பி விடப்பட்டதால், இந்திய சந்தையில் இந்த மாடல்கள் கிடைக்காமல் ஐபோன் பிரியர்கள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், ஆப்பிள் விநியோகஸ்தர்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்த ஐபோன் ஏற்றுமதியில், 3 முதல் 5 சதவீதம் அதிகாரப்பூர்வமற்ற ஏற்றுமதிகளிலிருந்து வருவதாக தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில், கிட்டத்தட்ட பாதி ரஷ்யாவிற்கு செல்கிறது. அங்கு உக்ரைன் போருக்குப் பிறகு ஆப்பிள் செயல்பாடுகளை நிறுத்தியது. ஆப்பிளின் ஐபோன் ஏற்றுமதி அக்டோபரில் 1.6 பில்லியன் டாலர்களை எட்டியது. இது இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கள்ளச் சந்தை திசைதிருப்பல் கடுமையான பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அடிப்படை ஐபோன் 17-ன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆப்பிளின் எச்சரிக்கைக்கு இந்திய சில்லறை விற்பனையாளர்கள் எதிர்ப்பு

ஆப்பிளின் இந்த உத்தரவு, தங்களை நியாயமற்ற முறையில் குறிவைத்து, பெரிய வடிவ கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு விலக்கு அளிப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் வாதிடுகின்றனர். "ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான தொலைபேசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன," என்று அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், உள்நாட்டு நுகர்வோருக்கான நிதிப் பலன்கள் தவறாக ஒதுக்கப்படுகின்றன என்றும், இது கேஷ்பேக் கோரிக்கைகள் மற்றும் ஜிஎஸ்டி குறைபாடுகள் மூலம் இழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

டிசம்பருக்குள் விநியோக நிலைமை சீராகும் - டிம் குக்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், நிறுவனத்தின் சமீபத்திய வருவாய் அழைப்பின் போது, ​​விநியோகக் கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டார். வலுவான தேவை காரணமாக, பல ஐபோன் 16 மற்றும் 17 மாடல்களில் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக அவர் கூறினார். டிசம்பர் மாதத்திற்குள் விநியோக நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
ரூ.30,000-க்குள் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்! 2026-ல் வாங்க சிறந்த மாடல்கள் எவை?
ரூ.30,000-க்குள் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்! 2026-ல் வாங்க சிறந்த மாடல்கள் எவை?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget