மேலும் அறிய
Teachers of Tamil Cinema : கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தமிழ் சினிமாவின் நல்லாசிரியர்கள்..பட்டியல் இதோ!
Teachers of Tamil Cinema : நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இங்கே தமிழ் சினிமாவில் போற்றப்படும் ஆசிரியர்களின் பட்டியலை காண்போம்.
தமிழ் சினிமாவின் ஆசிரியர்கள்
1/6

'பரியேறும் பெருமாள்' படத்தில் பூ ராமு கேரக்டர். சாதிய அடக்குமுறையிலிருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள கல்விதான் சிறந்த ஆயுதம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கும் கேரக்டர். 'அன்னைக்கு என்னைய அடக்கணும்னு நெனைச்சவன்லாம் இன்னைக்கு ஐயா சாமின்னு கும்பிடுறான்' என படிப்பு ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
2/6

பேராண்மை - ஜெயம் ரவி பழங்குடியினத்தைச் சேர்ந்த படித்த ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியான ஜெயம் ரவி, அங்கு என்சிசி பயிற்சிக்காக வரும் மாணவிகள் படைக்கு அதிகாரியாக வருகிறார். அதில் காட்டுக்குள் 5 மாணவிகளை தேர்வு செய்து நாட்டுக்கு எதிராக நிகழப்போகும் ஆபத்தை தடுப்பதே இப்படத்தின் கதை. ஆனால் சாதிய அடக்குமுறையாலும், முதலாளித்துவத்தாலும் புறக்கணிக்கப்பட்டாலும், கல்வியும், திறமையும் தான் நம்மை மேலும் பலப்படுத்தும் என்பதை பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தியது இப்படம்.
Published at : 05 Sep 2023 10:36 AM (IST)
மேலும் படிக்க




















