மேலும் அறிய
OTT Release : வார இறுதியை கழிக்க நச்சுனு நாலு படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் இவைதான்!
இந்த வார இறுதியில் ஓடிடியில் வெளியாகும் படங்களை இங்கு காணலாம்.

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்
1/6

திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது தனி அனுபவம்தான். பின் கொரோனா காலத்தில் தியேட்டர் பிசினஸ் பெரிய அடிவாங்கியது.
2/6

சில நேரங்களில் நம்ஊரடங்கு காலத்தில் அனைவரும் கூடி ஓடிடி தளத்தில் படங்களையும் சீரிஸ்களையும் பார்க்க ஆரம்பித்தனர். அந்தவகையில் இந்த வார இறுதியில் ஓடிடியில் வெளியாகும் படங்களை இங்கு காணலாம். வசதிக்கேற்றார் போல படங்களைப் பார்க்க வசதியானது ஓ.டி.டி. தளம்தான்.
3/6

ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாக பல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், ஜீ5 ஓடிடியில் இன்று வெளியாகிறது.
4/6

இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'டக்கர்’. நடிகை திவ்யான்ஷா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற டக்கர் இன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
5/6

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத் குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போர் தொழில்’. தமிழில் சிறப்பான த்ரில்லர் படம் என்று பாராட்டுகளை பெற்றது. இது சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியாகிறது.
6/6

ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம், ‘ஃபர்ஹானா’. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதனை சோனி லை வ் தளத்தில் காணலாம்.
Published at : 07 Jul 2023 03:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement