மேலும் அறிய
Cinema Update : மீண்டும் அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா!
Cinema Update : மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

சினிமா செய்திகள்
1/6

கவின் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2/6

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் அம்மனாக நடிக்கவுள்ளார் நயன்தாரா. இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
3/6

ஜெயம் ரவி மற்றும் எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகி வரும் பிரதர் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ குழுமம் பெற்றுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
4/6

யோகி பாபு நடித்து வரும் போட் படத்தை சிம்பு தேவன் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில் ஷோக்கா நானும் என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
5/6

அம்மு அபிராமி நடித்துள்ள ஜமா படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 2 தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
6/6

பிரசாந்த், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகிபாபு, கே எஸ் ரவி குமார் ஆகியோர் நடித்துள்ள அந்தகன் பதின் டீஸர் வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 13 Jul 2024 01:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
திருச்சி
தூத்துக்குடி
ஆட்டோ
Advertisement
Advertisement