மேலும் அறிய
Maveeran Trailer Analysis : வானத்தை அண்ணாந்து பார்க்கும் சிவா.. ஒரு வேளை படக்கதை இதுதானோ?
Maveeran Trailer Analysis : வித்தியாசமான கதையில் வித்தியாசமாக தோன்றும் சிவா நடித்துள்ள மாவீரன் ட்ரெயலர் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாவீரன் படத்தின் ட்ரெய்லரில் வரும் காட்சி
1/6

தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தில் அதிதி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
2/6

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நடிகை சரிதா சிவாவிற்கு அம்மாவாக நடிக்க, குக் வித் கோமாளி சீசன் 4 புகழ் மோனிஷா சிவாவின் தங்கையாக நடித்துள்ளார்.
3/6

இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில், சிவா பயந்த சுபாவம் கொண்ட ஒரு நபராக நடித்துள்ளார் என்று தெரிகிறது. ஊடகத்தில் ஓவியராக வேலைப்பார்க்கும் இவர், பத்திரிக்கைக்காக வரையும் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது.
4/6

அரசியல் வாதிகளை கண்டு அஞ்சும் இவர் சந்தர்ப்ப சூழலில் அவர்களிடம் சிக்கிகொள்கிறார். பின்னர், மீதமுள்ள ட்ரெய்லர் காட்சியில் சிவா வானத்தை அண்ணாந்து பார்க்கும் எக்கசக்கமான க்ளிப்ஸ் இடம்பெற்றுள்ளன. பயந்த சுபாவமாக இருக்கும் இவர், மேலே பார்க்கும் போது ஏதோ ஒரு மாற்றத்திற்கு உள்ளாகிறார்.
5/6

பேசிக் இன்ஸ்டிங்க்ட், தேஜாவு போன்ற கதை அமைப்பை மாவீரன் கொண்டிருந்தாலும் வானத்திற்கும் இவருக்குமான தொடர்பு படத்தின் சர்ப்ரைஸ் எலமண்டாக அமையும்.
6/6

வித்தியாசமான கதையில் வித்தியாசமாக தோன்றும் சிவா நடித்துள்ள மாவீரன் ட்ரெயலர் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Published at : 03 Jul 2023 03:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion