MK Stalin on Vijay : "CM விஜய் காவல்துறையை OUTSOURCE செய்துவிட்டாரா?" LAW & ORDER குறித்து ஸ்டாலின்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வந்த போது மேயர் பிரியா அங்கே வராதது விமர்சனத்தில் சிக்கிய நிலையில் முதலமைச்சர் விஜய் ஒன்றும் மேயரின் பாஸ் கிடையாது என திமுக தரப்பில் இருந்து பதிலடி வந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்டு மழை அளவு விவரங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள், மக்கள் அளிக்கும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் சென்னை மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட போது மேயர் பிரியா அங்கு வராதது தவெகவினரின் விமர்சனத்தில் சிக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சருக்கு விவரங்களை சொல்லும் கடமை மேயருக்கு இருப்பதாக விமர்சனம் செய்தனர்.
இந்தநிலையில் மேயர் விவகாரத்தில் திமுக செய்திதொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில் மேயர் பிரியாவுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தாரா என்பதை தெளிவுபடுத்துங்கள். அவருக்கு அழைப்பு விடுப்பதே அதிகாரப்பூர்வமான மரபு. முதலமைச்சர் ஒன்றும் அவருக்கு பாஸ் கிடையாது. அவருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு ஒரே காரணம் உங்களுடைய பாதுகாப்பின்மை உணர்வுதான். மழைக்காலத்தின் போது மேயர் பிரியா செய்த வேலையை, தவெகவின் முழு அமைச்சரவையாலும் செய்ய முடியாது” என கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















