5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு படுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்த நாள் காலையில் படுக்கையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவத்தில் பரபரப்பை கிளப்பும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 37 வயதான மகேஷ், 35 வயதான அவரது மனைவி லலிதா, 11 மற்றும் 3 வயது மகன்கள் மற்றும் 7 வயது மகள் ஆகியோர் படுக்கையறையிலேயே சடலமாக கிடந்துள்ளனர். தேர்வுக்கு சிறுவன் காலையில் எழுந்திருக்காத போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முந்தைய நாள் இரவு 11 மணியளவில் குடும்பத்தினர் நூடுலஸ் சாப்பிட்டு படுத்துள்ளனர். அதில் ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்த குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையே சொத்து தொடர்பான குடும்பத் தகராறு இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் சொல்கின்றனர். உயிரிழந்த மகேஷ் என்பவரின் தாய் சொத்தை தனது மகள் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துவிட்டு மகனை வீட்டை காலி செய்யுமாறு சண்டை போட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. சொத்து பிரச்னையில் அம்மா மகனுக்கு இடையே தினமும் தகராறு நடந்துள்ளது.
மேலும் திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பிய பிறகு அந்த குடும்பத்தினருக்கு உயிரிழந்த நபரின் தாய் தாய் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். 5 பேரின் உயிர் பறிபோனதற்கு நூடுல்ஸ் தான் காரணமா அல்லது இது திட்டமிட்ட கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















