மேலும் அறிய

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. இந்த சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்களால் கதை இப்போது இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி:

கோயிலில் தனியாக இருக்கும் சாமுண்டீஸ்வரியைக் கொலை செய்ய சிவனாண்டி தனது ஆட்கள் மூலம் திட்டம் போடுகிறார். அதன்படி, அடியாட்கள் சாமுண்டீஸ்வரியை நெருங்கும் நேரத்தில், கார்த்திக் கொடுத்த பார்சல் அவருக்கு நினைவுக்கு வருகிறது. ஏற்கெனவே, "உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இந்தப் பார்சலைத் திறந்து பாருங்கள்" என்று கார்த்திக் சொல்லியிருந்தார்.

பார்சலில் இருந்த துப்பாக்கி:

உடனே அந்தப் பார்சலைத் திறந்து பார்க்கும் சாமுண்டீஸ்வரிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதற்குள் ஒரு துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்துக் காட்டி தன்னைத் தாக்க வந்த அடியாட்களை விரட்டியடிக்கிறார். தன்னிடம் கோபமாக இருந்தாலும், தன்னுடைய பாதுகாப்பில் இவ்வளவு அக்கறை காட்டும் கார்த்திக்கை நினைத்து சாமுண்டீஸ்வரி நெகிழ்ந்து போகிறார்.

இதற்கிடையில், செங்கல் சூளையில் ஒரு பெரிய சதி அரங்கேறுகிறது. அங்கு ஒரு பொம்மையைப் பிணம் போல தயார் செய்து, அழுகிய உடலைப் போலத் தோன்றும் வகையில் நிலத்திற்குள் புதைத்து வைக்கின்றனர். இதை வைத்து அடுத்தகட்டத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தயாராகின்றனர்.

செங்கல் சூளையில் சடலம்:

மறுநாள் காலையில் அந்தப் பகுதிக்கு வரும் இன்ஸ்பெக்டர் சரவணன், செங்கல் சூளையில் வேலைகளை உடனடியாக நிறுத்தச் சொல்கிறார். தொடர்ந்து, அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கும்போது அழுகிய நிலையில் ஒரு உடல் கிடைக்கிறது. அதை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிடுகிறார்.

அப்போது, "இந்த செங்கல் சூளை யாருக்குச் சொந்தமானது?" என்று விசாரிக்கிறார். அது சாமுண்டீஸ்வரி பெயரில் இருந்தாலும், தற்போது சந்திரகலாதான் அதை நிர்வகித்து வருகிறார் என்ற தகவல் போலீசாருக்குத் தெரிய வருகிறது.

சிவனாண்டி கைது:

இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தும் இன்ஸ்பெக்டர் சரவணன், நேராக சந்திரா மஹாலுக்குச் செல்கிறார். அங்கு சிவனாண்டியும் சித்தப்பாவும் இருக்கின்றனர்.

அவர்களிடம், "சந்திரகலாவுக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பிணம் கிடைத்திருக்கிறது. இந்தக் கொலை வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும்" என்று அதிரடியாகச் சொல்கிறார். ஆனால், சந்திரகலா அங்கு இல்லாததால், வீட்டில் இருந்த சிவனாண்டியை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

இதற்கிடையில், சித்தப்பா மட்டும் எப்படியோ அங்கிருந்து நழுவி, உடனே சந்திரகலாவுக்குப் போன் செய்து போலீஸ் வந்த விவரத்தையும் சிவனாண்டி கைது செய்யப்பட்டதையும் தெரிவிக்கிறார்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவனாண்டியிடம், சந்திரகலா எங்கே இருக்கிறார் என்று போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், சந்திரகலாவின் வக்கீலும் அங்கு வந்து, "இடம் யார் பெயரில் இருந்தாலும், சந்திரகலா நேரில் சரணடைந்தால்தான் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என்று ஆலோசனை கூறுகிறார்.

சிக்குவாரா சந்திரகலா?

இறுதியாக, செங்கல் சூளையில் பிணம் கிடைத்தது முதல் சிவனாண்டி கைது செய்யப்பட்டது வரை நடந்த எல்லா விஷயங்களையும் இன்ஸ்பெக்டர் சரவணன் கார்த்திக்கிற்குப் போன் செய்து தெரிவிக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

சந்திரகலா போலீசில் சிக்குவாரா? செங்கல் சூளையில் நடந்த இந்தச் சதியின் பின்னணி என்ன? கார்த்திக் இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறார்? அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘கார்த்திகை தீபம்’ சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Embed widget