இந்த ஆண்டு அமாவாசை திதி இரண்டு நாட்கள் நீடிப்பதால் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 20 மாலை 3:44 மணிக்கு தொடங்கி அக்டோபர் 21 மாலை 5:54 மணிக்கு முடிவடைகிறது. இந்து பஞ்சாங்கத்தின்படி, தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஏனெனில் லட்சுமி பூஜை முகூர்த்தம் அன்று மாலை வருகிறது.
தீபாவளி 2025
FAQs
இந்த ஆண்டு தீபாவளி எப்போது கொண்டாடப்படுகிறது?
தீபாவளியை யார் கொண்டாடுகிறார்கள்?
ஒளியின் பண்டிகை என்றும் அழைக்கப்படும் தீபாவளி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தீமையை அழிக்கும் நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.
தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
தீபாவளி திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையோடு சேர்த்து, திங்கள் அன்று சேர்த்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தீபாவளி பிற நாடுகளில் எங்கே கொண்டாடப்படுகிறது?
உலகம் முழுவதும் நேபாளம், இலங்கை, மொரிஷியஸ், பிஜி, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தீபாவளி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.













