மேலும் அறிய

Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!

கருப்பு, விஸ்வநாத் அன் சன்ஸ் மற்றும் சீன் ஆகிய 3 படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சீன். 

150 கோடி வசூல்:

த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது மாதவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் வெளியானது முதலே தொடர்ந்து நல்ல வரவேற்பை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெற்று வந்தது. படம் வெளியாகிய 4 நாட்களில் சீன் உலகெங்கும் ரூபாய் 149.50 கோடி வசூலை எட்டியுள்ளது. 

4வது நாளான நேற்று மட்டும் சீன் படத்தை திரையரங்குகளில் தோராயமாக 15 லட்சத்து 78 ஆயிரத்து 355 பேர் கண்டு ரசித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கான கடைசி நாள் விடுமுறை நேற்று என்பதால் ரசிகர்கள் அதிகளவு திரையரங்குகளில் கூட்டமாக காணப்பட்டனர்.

உச்சத்தில் இருந்த சூர்யா:

நடிகர் சூர்யா 2000 காலகட்டத்திற்கு பிறகு ஏறுமுகத்திலே இருந்தார். கஜினி, ஆறு, வேல், சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், சிங்கம் 2 என்று சூர்யாவின் மார்க்கெட் விஜய், அஜித்தை மிஞ்சும் அளவிற்கு இருந்தது. அஞ்சான் பட தோல்வி அவரது திரை வாழ்வில் மிகப்பெரிய சறுக்கலை உண்டாக்கியது.

அதன்பின்னர் அவர் தொடர்ந்து நடித்தாலும் பழைய வெற்றியை அவரால் கொடுக்க இயலாமலே இருந்தது. சூரரைப் போற்று, ஜெய் பீம் பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும் அந்த இரு படமும் ஓடிடி தளத்தில் வெளியானதால் திரையரங்கில் அவரால் மீண்டும் பழைய ராஜாங்கத்தை நடத்த இயலாமல் இருந்தது.

ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி:

ஆனால், இந்தாண்டு வெளியான கருப்பு படம் சூர்யாவின் பழைய மாஸை மீண்டும் கொண்டு வந்தது. ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூல் மழையை அந்த படம் கொண்டு வந்த நிலையில், அடுத்து வந்த விஸ்வநாத் அன் சன்ஸ் படமும் ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. இந்த நிலையில், இந்த படமும் ரூபாய் 150 கோடி வசூலைக் குவித்த நிலையில், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சுமார் 30 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான இந்த படம் அதை விட 5 மடங்கு லாபத்தை அளித்துள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. 

பழைய ஃபார்முக்கு வரும் சூர்யா:

விஜய்யும் திரையுலகை விட்டு விலகி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அஜித்தும் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருவதால் அவ்வப்போது மட்டும் நடிப்பதாலும் ஒரு வெற்றிடம் இருப்பதாகவே பலரும் கருதினர். ஹாட்ரிக் ஹிட் மூலமாக சூர்யா அந்த இடத்தை அலங்கரிப்பார் என்றே தயாரிப்பாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

மேலும், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது மீண்டும் பழைய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், அயன், சிங்கம், கருப்பு போன்று ஆக்ஷன் படங்களை அடுத்தடுத்து கொடுத்து தனது பழைய ஃபார்முக்கு திரும்ப சூர்யாவும் திட்டமிட்டுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

'பெத்லகேம்' ஹிட் கொடுத்த தெம்பு.. தென்னிந்தியாவைச் சூறையாட வரும் 2 பிரம்மாண்ட படங்கள்!
'பெத்லகேம்' ஹிட் கொடுத்த தெம்பு.. தென்னிந்தியாவைச் சூறையாட வரும் 2 பிரம்மாண்ட படங்கள்!
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7,000 கோடியை தொட்டது... அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகத்திற்கு சிவகாசி அதிரடி திட்டம்
தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7,000 கோடியை தொட்டது... அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகத்திற்கு சிவகாசி அதிரடி திட்டம்
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
Embed widget