மேலும் அறிய
HBD Simbu : மன்மதன்.. வல்லவன்.. இளமை மாறாத நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று!
HBD Simbu : 41 வது பிறந்தநாளை காணும் நடிகர் சிம்புவுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு எனும் சிலம்பரசன்
1/6

பன்முக கலைஞர் டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் 1984 ஆம் ஆண்டு உறவை காத்த கிளி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எக்கசக்கமான படங்களில் நடித்தார்.
2/6

2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கோவில், குத்து, மன்மதன், சரவணா, சிலம்பாட்டம், விண்ணை தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போட போடி ஆகிய படங்களில் நடித்தார்.
3/6

ஒரு காலகட்டத்தின் பிறகு, இவர் நடித்த சில படங்கள் பெரிதாக ஓடவில்லை. கொரோனாவின் போது உடல் எடையை குறைத்து மீண்டும் கம்-பேக் கொடுத்தார். ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார்.
4/6

இதற்கு இடையே ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராகவும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்குபெற்றார். 2020ல் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்திலும் நடித்தார்.
5/6

அவரது தந்தை போலவே நடிப்பை தாண்டி பாடகராகவும், இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
6/6

தனக்கான தனி ரசிகர் படையை கொண்ட சிம்பு எனும் சிலம்பரசன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 03 Feb 2024 11:45 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion