மேலும் அறிய
Kushi Trailer : 'ஆராத்யா என் ஆராத்யா… என்னிதய துணைவியே ஆராத்யா..' வெளியானது குஷி படத்தின் ட்ரெய்லர்!
Kushi Trailer : சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

குஷி ட்ரெய்லர்
1/6

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் குஷி படம் உருவாகி வரும் நிலையில், ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்குகிறார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமக்கிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2/6

குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
3/6

இதுவரை படம் தொடர்பாக வெளியான அனைத்து போஸ்டர்களிலும் சமந்தா புர்கா அணிந்து காணப்பட்டதால் படத்தில் இஸ்லாமிய வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்குதான் நமக்கு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். முதல் சில நிமிடங்களில் பார்ப்பதற்கும் மீண்டும் ஒரு பம்பாய் படம் போல் தோன்றும் ட்ரெய்லர் மெல்ல தனது ட்ராக்கை மாற்றுகிறது.
4/6

பிராமண வீட்டுப் பெண்ணான சமந்தா விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறார். தங்களது குடும்பத்தினரிடம் இருந்து வரும் எதிர்ப்புகளை சமாளித்து இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாக தான் போகிறது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்கு இடையில் புதிய பிரச்னைகள் உருவாக ஆரம்பிக்கின்றன.
5/6

இந்தப் பிரச்னைகளை எல்லாம் சமாளித்து மகிழ்ச்சியான ஒரு தம்பதியாக தங்களது குடும்பத்தினர்கள் முன்பு வாழ்ந்து காட்டுமா இந்த ஜோடி என்பதே இப்படத்தின் கதை.
6/6

ரொமாண்டிக் காமெடியாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு வழக்கமான படங்களைத் தாண்டி புதிதாக ஏதாவது சொல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Published at : 09 Aug 2023 06:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement