TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
TVK Vijay Speech: திமுக தீய சக்தி எனவும், தவெக தூய சக்தி என பேசிய விஜய், களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது., களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே என தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி, இரண்டு மாநில மாநாட்டை நடத்தி கலக்கியிருந்தார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டவர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர். நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக சுமார் 2 மாதங்கள் தவெகவின் அரசியல் பணிகள் முடங்கி கிடந்த நிலையில், 72 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த வாரம் விஜய் நடத்தினார். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து 43 நிபந்தனைகளோடு ஈரோட்டில் இன்று பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவினல் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்,
ஈரோட்டில் விஜய் பேச்சு
மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு, இந்த மண் விவசாயத்திற்கு பெயர் போன மண், இந்த மண்ணில் காலிங்கராயன், அணை கட்டியதிலும் உணர்வு பூர்வமான விஷயம் உள்ளது. அணை கட்டும் போது ரொம்ப சோர்வடைந்துவிட்டார். அவரது அம்மா தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அணை கட்ட அனுப்பினார்கள். பெற்ற தாய் கொடுத்த தைரியம், எதையும் சாதிக்க முடியும். அப்படி பெற்ற தாய் போல் தான் நீங்கள், தங்கை, தம்பி, அண்ணன் எல்லாம் நீங்கள் தான்,
எப்படி விஜய் பெயரை கெடுக்காலம் என சூழ்ச்சி செய்யும் கூட்டம் உள்ளது. இந்த உறவு இன்று நேற்று வந்த உறவு இல்லை, 32 ஆண்டுகளாக உறவாக உள்ள உறவு,10 வயதில் திரைத்துறையில் எனது பயணம் தொடங்கியபோது உருவான உறவு, நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த விஜய்யை மக்கள் ஒரு நாளும் கை விட மாட்டார்கள். மக்கள் கூடவே நிற்பார்கள் என அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
காலிங்கராயர் அணை - விஜய் சொன்ன குட்டி கதை
இந்த பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்துனா மக்களுக்கு எவ்வளவு பயன் கிடைக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டில் மக்களை பற்றி யோசிக்கவில்லை. ஆனால் அப்போவே மக்களுக்காக யோசித்து தான் காலிங்கராயர் அணையை கட்டினார். ஈரோட்டில் மற்றொருவரும் இருந்தார். ஈரோடு கடப்பாறை தான் பெரியார், ஈரோடு மாவட்ட பிறந்தவர், இட ஒதுக்கீடு சடத்திற்காக போராட்டம் நடத்தியவர் நம்ம பெரியார். எப்போதும் ஆச்சரியமாக பார்க்க கூடிய தலைவர், நமது கொள்கை தலைவர் தான் தந்தை பெரியார்.
உங்களுக்கு தான் டிவிகே ஒரு பொறுட்டே இல்லையே, அப்ப ஏன் கதறுகிறீங்கள், எனக்கு பயம் இல்லை, எனக்கு பயம் இல்லையென சொல்லிட்டு இருக்கீங்க. ஆனால் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்க, மாறு வேடத்தில் மரு வைத்துவிட்டு வருகிறீங்க, மக்கள் எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்காங்க,
உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவா, அசிங்கமா பேசுறது தான் அரசியல்ன்னா அந்த அரசியல் நமக்கு வராது. வராதுன்னா அப்படி இல்ல.. உங்கள விட எனக்கு நல்லாவே வரும். வேணாம்னு விட்டு வச்சிருக்கேன். அப்புறம் ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் என விஜய் ஆவேசமாக பேசினார்.
திமுகவை விளாசிய விஜய்
தொடர்ந்து பேசிய அவர், பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள், பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள் தான் இவர்கள், எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள் கொடுத்தீங்க, நீட் விலக்கு ரத்து, கேஸ் சிலிண்டர் குறைப்பு என அறிவித்தாங், எல்லாம் செஞ்சாங்கே செஞ்சாங்களா என கேள்வி எழுப்பிய விஜய், எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லையென கூறினார்.





















