மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Rajinikanth: மூத்த மகள் படத்துக்கு டப்பிங்.. இளைய மகள்வழி பேரன் காதணி விழா.. அப்பாவாக இணையத்தில் ஹிட் அடித்த ரஜினி!
Rajinikanth: கோவையின் தன் பேரன் காதுகுத்து விழாவில் கலந்துகொண்டது முதல், லால் சலாம் டப்பிங் வீடியோ வெளியானது வரை நடிகர் ரஜினிகாந்த் இன்று சோஷியல் மீடியோக்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
ரஜினி
1/7

தனது மகள் சௌந்தர்யாவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார்.
2/7

கோவை வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3/7

சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊரான கோவை, சூலூரில், இவர்களது குழந்தையின் மொட்டை, காதணி மற்றும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது.
4/7

இந்நிலையில், தனது சம்பந்தி தொழிலதிபர் வணங்காமுடியின் இல்லத்துக்கு சென்ற ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
5/7

மேலும் இன்று மாலை ரஜினிகாந்த் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்துக்கு டப்பிங் பேசும் வீடியோ வெளியானது.
6/7

“மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” எனும் வசனங்களை ரஜினிகாந்த் பேச, ‘டேக் ஓகே பா’ என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரைப் பாராட்டும் வகையில் இந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
7/7

இந்நிலையில், லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
Published at : 17 Sep 2023 08:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















