மேலும் அறிய
Jailer Audio Launch: 'காக்கை என்றும் கழுகாக முடியாது..’ ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே நடக்கும் ஆன்லைன் போர்!
Jailer Audio Launch: நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணியில் தயாராகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய குட்டி ஸ்டோரி தற்போது பேசுப்பொருள் ஆகியுள்ளது
ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா
1/6

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
2/6

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
3/6

இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினி, பல விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசினார். அவர் அப்போது கூறிய குட்டி ஸ்டோரி தற்போது இணையவாசிகள் இடையே பேசுப்பொருள் ஆகியுள்ளது.
4/6

“காகங்களும் மற்ற பறவைகளும் அனைவரையும் தொந்தரவு செய்தது. அதில் ஒரு காகம், கழுகு ஒன்றை தொடர்ந்து தொந்தரவு செய்தது. ஆனால் காகத்தை அந்த கழுகு எதுவும் செய்யவில்லை. மாறாக கழுகு அதைப்பற்று கவலைப் படாமல் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடும். காகத்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கழுகுடன் இணைந்து பறக்கவும் முடியாது போட்டி போடவும் முடியாது” என்று பேசினார் ரஜினி.
5/6

விஜய்யை தாக்கவே இந்த குட்டி ஸ்டோரியை ரஜினி கூறி இருக்கிறார் என ஒரு தரப்பினரும், அவர் விஜய்யை தாக்கவில்லை, தத்துவ ரீதியாகவே பேசினார் என மற்றொரு தரப்பினரும் தற்போது ஆன்லைன் போர் நடத்தி வருகின்றனர்.
6/6

பெரும் எதிர்ப்பார்ப்புகளிடையே உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 10 ஆம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Jul 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க





















