மேலும் அறிய
HBD Sarathkumar : ‘சிங்கத்தை போன்ற உறுதியான இதயத்தை கொண்டவருக்கு வாழ்த்துகள்..’ கணவரை வாழ்த்திய ராதிகா சரத்குமார்!
Radikaa Sarathkumar Wishes : இன்று பிறந்த நாள் காணும் சரத்குமாருக்கு, ராதிகா வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கணவருக்கு முத்தமிடும் ராதிகா சரத்குமார்
1/6

தனது திரைப்பயணத்தை 1986களில் தொடங்கிய சரத்குமார் புலன் விசாரணை படத்தில் நடித்து பிரபலமானார்.
2/6

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த சரத்குமார் நாட்டாமை, சூர்ய வம்சம், பாட்டாளி, சமுத்திரம், தென்காசி பட்டினம் போன்ற குடும்ப ஆடியன்ஸிற்கு ஏற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்.
3/6

சினிமாவில் நடித்து கொண்டு அரசியல் களம் புகும் ட்ரெண்ட் அப்போது இருந்து வந்த நிலையில், சரத்குமார் திமுகவில் இணைந்தார். பின் அதிமுகவில் சேர்ந்தார். அதில் இருந்து விலகி தனது சொந்த கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை 2007ல் தொடங்கினார்.
4/6

அண்ணாச்சி, சூர்யவம்சம் ஆகிய படங்களில் ராதிகாவுடன் இணைந்து நடித்த சரத்குமார், அவரை 2001ல் மணந்துகொண்டார். சமீபத்தில் இருவரும் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தனர்.
5/6

சமீபத்தில் இவரும் அசோக் செல்வனும் நடித்த போர் தொழில் க்ரைம் திரில்லர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
6/6

இந்நிலையில் இன்று பிறந்த நாள் காணும் சரத்குமாருக்கு, ராதிகா வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், “சிங்கத்தை போன்ற உறுதியான இதயத்தை கொண்டவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் உங்கள் விடாமுயற்சியை கைவிடாதீர்கள். எனது மனமார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Published at : 14 Jul 2023 07:47 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion