மேலும் அறிய

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

மகாராஷ்டிர மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பாடங்கள்: மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தைத் தடுக்கும் நோக்கில், பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பாடங்களைச் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர சட்ட மேலவையில் மாணவர்களின் போதைப் பழக்கம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றபோது, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

எந்த வகுப்புகளுக்கு? 

5ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந்தப் புதிய விழிப்புணர்வுப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தனியான ஒரு பாடமாக இல்லாமல், ஏற்கனவே உள்ள அறிவியல் மற்றும் உடல்நலம் / உடற்கல்வி ஆகிய பாடங்களுக்குள் ஒரு பகுதியாக இது இணைக்கப்படும்.

பாடத்தின் உள்ளடக்கம்

தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களை எளிதில் ஈர்க்கும் இ-சிகரெட்டுகள், வேப் பேனாக்கள் (vape pens), ஹூக்கா மற்றும் பிற அபாயகரமான போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து இதில் விரிவாகக் கற்பிக்கப்படும்.

நிபுணர் குழு

இந்தப் பாடங்களை வடிவமைப்பதற்காகச் சிறப்பு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். மாணவர்களின் வயது மற்றும் புரிதல் திறனுக்கு ஏற்ப இந்த அமைப்பு பாடத்திட்டத்தை உருவாக்கும்.

காவல்துறை கண்காணிப்பு


பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது மட்டுமின்றி, பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கக் காவல் துறையுடன் இணைந்து கல்வித்துறை செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பள்ளிகளுக்கு வெளியே மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, தாமினி மற்றும் நிர்பயா போன்ற சிறப்புப் காவல் படைகளின் ரோந்துப் பணிகள் பள்ளிகள் அருகே தீவிரப்படுத்தப்படும்.

சிறு வயதிலேயே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், மாணவர்களை அடிமைப் பழக்கத்திலிருந்து பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என மகாராஷ்டிர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் விரைவில் அமலுக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget