மேலும் அறிய

மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?

ஜி.வி. பிரகாஷின் சமீபத்திய ஆல்பங்களில் ஒரு சில பாடல்கள் ஹிட் ஆனாலும், அவரது முந்தைய படங்களைப் போல முழு ஆல்பங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஒரு படத்தின் இசை வெளியானாலே அந்த முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்பது வழக்கமாக இருந்தது. அந்த பட்டியலில் தவறாமல் இடம்பெற்ற பெயர் ஜி.வி. பிரகாஷ் குமார். காதல், மெலடி, மாஸ், நாட்டுப்புற இசை, பின்னணி இசை என எந்த வகையிலும் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய அவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், முன்பு இருந்த அளவிலான "முழு ஆல்பம் ஹிட்" வெற்றியை அடைய முடியாமல் தவித்து வருகிறார் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஜிவி பிரகாஷின் ஹிட் பாடல்கள்

ஜி.வி. பிரகாஷின் இசைப் பயணத்தை திரும்பிப் பார்த்தால், 'வெயில்' படத்திலேயே அவர் கவனிக்கத்தக்க அறிமுகத்தை கொடுத்தார். அதன்பிறகு 'கிரீடம்', 'அங்காடித் தெரு', 'மதராசப்பட்டினம்', 'ஆடுகளம்', 'தெய்வத்திருமகள்', 'மயக்கம் என்ன', 'தாண்டவம்', 'ராஜா ராணி',  'டார்லிங்', 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'தெறி', 'அசுரன்', 'சூரரைப் போற்று',  போன்ற படங்களின் பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சமீபத்திய முக்கிய சேர்க்கையாக 'அமரன்' அமைந்தது. அந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, முழு ஆல்பமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ஜி.வி. பிரகாஷின் பழைய இசை மாயம் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்தது.

அதேபோல், கென் கருணாஸ் இயக்கிய 'யூத்' திரைப்படத்தின் பாடல்களும் வெளியான பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆல்பத்தில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்களும் சமூக வலைதளங்கள், இசை தளங்கள், ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் இடம்பிடித்தன. ஆனால் இதுபோன்ற முழுமையான ஆல்ப வெற்றிகள் சமீப காலங்களில் குறைந்துவிட்டன என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

மிஸ் ஆகும் மேஜிக் 

இந்த ஆண்டில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த 'பராசக்தி', 'காரா', 'விஸ்வநாத் & சன்ஸ்', 'அருள்வான்', 'மகுடம்', 'மண்டாடி' போன்ற படங்களின் ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சில பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், ஒரு காலத்தில் அவரது ஆல்பங்களுக்கு இருந்த "ஒவ்வொரு பாடலும் ஹிட்" என்ற அடையாளம் இதில் பெரிதாக வெளிப்படவில்லை. ஒரு அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே அதிகம் பேசப்பட்ட நிலையில், முழு ஆல்பமாக ரசிகர்களை கட்டிப்போடும் அனுபவம் குறைந்துவிட்டதாக இசை ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பிஸியாக இசையமைத்து வருகிறார். ஆண்டுக்கு ஏராளமான படங்கள் அவரது கைவசம் இருந்தாலும், அவற்றில் ஒரு சில பாடல்கள் மட்டுமே வைரலாகின்றன. ஆனால், படம் வெளியாகும் முன்பே முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடும் நிலை தற்போது அரிதாகிவிட்டது. இது அவரது திறமையில் ஏற்பட்ட குறைவு அல்ல; மாறாக, இசை ரசிக்கும் விதமே மாறிவிட்டது என்பதும் ஒரு வாதமாக முன்வைக்கப்படுகிறது.

மாறிவரும் இசை ரசனை

தற்போதைய இசை உலகில் சாய் அப்யங்கர், அனிருத் உள்ளிட்ட இளம் இசையமைப்பாளர்கள், சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகும் வகையில் பாடல்களை உருவாக்கி வருகின்றனர். இந்த பாடல்கள் வெளியாகும் முதல் சில வாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ரீல்ஸ், ஷார்ட்ஸ், மீம்ஸ் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்களை எட்டுகின்றன. ஆனால், பல பாடல்கள் சில மாதங்களுக்குப் பிறகு ரசிகர்களின் நினைவில் இருந்து மறைந்துவிடுகின்றன. நீண்ட காலம் கேட்கப்படும் "எவர்கிரீன்" ஆல்பங்கள் குறைந்து வருவதாக இசை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த மாற்றம் மற்ற இசையமைப்பாளர்களையும் பாதித்துள்ளது. இன்றைய சந்தையின் வேகத்திற்கு ஏற்ப இசையை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தம் அனைவருக்கும் இருக்கிறது. உடனடியாக வைரலாகும் பாடல்களே அதிக கவனம் பெறுவதால், நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ஆல்பங்களை உருவாக்கும் முயற்சிகள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த சூழலில், ஒருகாலத்தில் ஆல்பம் முழுவதையும் ரசிகர்கள் ரசிக்க வைத்த ஜி.வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களும் புதிய இசை போக்குக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ஜி.வி. பிரகாஷ் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. ஒரு நல்ல கதை, வலுவான இயக்குநர் மற்றும் இசைக்கான முழு சுதந்திரம் கிடைத்தால், 'அமரன்' போல மீண்டும் காலத்தால் அழியாத ஒரு முழு ஆல்பத்தை அவர் வழங்க முடியும் என்ற நம்பிக்கை இசை ரசிகர்களிடம் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget