மேலும் அறிய
Pradeep Wishes Kamal : ‘நல்லா இருங்க..ஆனால் தீர விசாரிங்க’ கமலை வாழ்த்துவது போல் வாரிய பிரதீப் ஆண்டனி!
Pradeep Wishes Kamal : இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி.
பிரதீப் ஆண்டனி
1/8

கவினின் நண்பர் மற்றும் நடிகருமான பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் பங்குபெற்றார்.
2/8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் இவரின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் ரெட் கார்ட் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.
3/8

இப்படி ஒரு நிகழ்வு நடந்தால், பெரும்பாலோனார் வாய்ப்பு பறிபோனதை எண்ணி கண்ணீர் விட்டு கதறுவோம். ஆனால், அதற்கு நேர்மாறாக ரெட் கார்ட் உடன் கொண்டாடி மற்றவர்களை வாழ்த்தி வருகிறார் பிரதீப்.
4/8

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
5/8

இவர் உள்ளே இருந்ததை விட, வெளியே வந்த பின்னர்தான் இவருக்கான ஆதரவும் ரசிகர் படையும் திரண்டுள்ளது. இவரின் சோஷியல் மீடியா கணக்கை பலரும் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். வித்தியாசமான இவரது பதிவுகளும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
6/8

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டில் இவர் இல்லையென்றாலும் இவருக்கு சம்பந்தமான விஷயத்தை வைத்து உள்ளே பெரும் பிரளயம் கிளம்பியுள்ளது.
7/8

தனது நண்பன் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவனை பற்றி எனக்கு நன்றாக தெரியும் என தனது தோழனுக்கு தோள் கொடுத்து நிற்கிறார் கவின்.
8/8

இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் கமலுக்கு, “உங்களின் பெரிய ரசிகன் நான்..சத்தியமாக சொல்கிறேன். இனிய 69வது பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் கலை சார்ந்த பணியினாலும் தமிழ் சினிமாவுக்கு நீங்கள் செய்த அர்ப்பணிப்பினாலும், உங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உள்ளது. லவ் யூ...” என வாழ்த்தி அத்துடன், நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய் ஆகிய ஹாஷ்டாகுகளை பதிவிட்டு தக் லைஃப் நாயகனுக்கே தக் லைஃப் செய்துள்ளார் பிரதீப்.
Published at : 07 Nov 2023 01:51 PM (IST)
Tags :
Pradeep Antonyமேலும் படிக்க





















