Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர் மாநாடும் நடைபெறுகிறது.
ராமதாஸ் கண்டன அறிக்கை
“46 ஆண்டு காலம் உழைத்து வளர்த்த பாமகவை என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிப்பு. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” - ராமதாஸ்
6 ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு
சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணத்தை 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம்
வணிகப் பயன்பாட்டுக்கு முன்பதிவு மூலம் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் 6,000 லி குடிநீர் ரூ.735ல் இருந்து ரூ.1,025 ஆகவும், 9,000 லி குடிநீர் ரூ. 1,050ல் இருந்து ரூ.1,535ஆகவும் உயர்வு.
உற்பத்தி, லாரி வாடகை உயர்வால் கட்டண உயர்வு என தெரிவிப்பு.
டிடிவி தினகரன் பேச்சு
“அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் மத்தியஸ்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. 2026 தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” - திருப்பூரில் டிடிவி தினகரன் பேட்டி
6வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து. 6வது நாளாக விமானச் சேவை ரத்து செய்யப்படுவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்பு. வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி.
சிலிண்டர் வெடித்து விபத்து; 25 பேர் உயிரிழப்பு
கோவா: அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து. விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு.
வார இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் விபத்து. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. போலீஸ் விசாரணை.
தவறான தகவல் கொடுத்தால் வழக்கு பாயும்..!
S.I.R படிவங்களில் தவறான தகவல்களை கொடுத்ததற்காக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது தேர்தல் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு
நாட்டிலேயே முதல்முறையாக நடவடிக்கை எடுத்தது தேர்தல் ஆணையம்
பாபர் மசூதி வடிவில் புதிய மசூதி
மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி வடிவில் அமைய உள்ள மசூதிக்கு அடிக்கல் நாட்டினார் திரிணாமூலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட MLA ஹூமாயூன் கபீர்.
33 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்கு சிறு மருந்தாக இந்த விழா நடைபெறுவதாக ஹூமாயூன் கபீர் பேச்சு.
கைவிடப்படும் பைக்குகள்
2025 L KTM DUKE 125 & RC 125, BAJAJ N150, BAJAJ PLATINA 110, BAJAJ CT 125X, HONDA CD 110 DREAM, HONDA CB 300R, BMW G 310 R & G 310 GS, ROYAL ENFIELD SCRAM 411 ஆகிய பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு. மிகக் குறைவான விற்பனையே உற்பத்தி நிறுத்தத்திற்கான காரணம் என தெரிவிப்பு.
சாதனையை முறியடித்த கோலி
சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி (20). சச்சின் - 19 | ஷாகிப் அல் ஹசன் - 17





















