கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Tn Weather Forecast: "தமிழ்நாட்டில் இன்று நண்பகல் 1 மணி வரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"

"தமிழகத்தில் இன்று (07-12-2025) நண்பகல் 1 மணி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"
வடகிழக்கு பருவமழை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, நேற்று காலை மேலும் வலுவிழந்தது. இதனால் இன்று தமிழ்நாட்டில் பரவலாக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் இன்று (07-11-2025) நண்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கன மழை காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





















